Thursday, November 12, 2009

நீதி: எப்பவுமே முதலாளியைத்தான் முதல்ல பேசவிடணும்.


ஒரு ஊரில் 2 நண்பர்கள் இருந்தார்கள் அவர்கள் வேலைக்கு செல்லும் பாதையில் ஒரு தகவல் பலகை இருக்கும் அதில் தினந்தோரும் நல்ல கருத்துக்கள், சிலேடைகள் எழுதப்பட்டிருப்பது வழுக்கம். அன்றும் "எப்பவுமே முதலாளியைத்தான் முதல்ல பேசவிடணும்." என்றிருந்தது, அதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட விவாதம் தற்போது முல்லா-வின் வேட்டிற்கு முன்னால் நிற்க வைத்திருந்தது.

அவர்களிருவரும் தாங்களுக்கு அந்த கருத்தின் ஆழத்தை விபரமகவும் சுலபமாகவும் புரியவைக்க வேண்டுமென முல்லா-வை கேட்டுக்கொண்டனர்.

முல்லா அவர்களிடம்,

ஒரு முதலாளி தனது கம்பெனியின் இரண்டு தொழிலாளர்களோடு பிக்னிக் போனார்.

போன இடத்தில் எதிர்பாராதபடி அவர்களது எதிரில் ஒரு தேவதை தோன்றி, ''ஆளுக்கொரு வரம் தருகிறேன். கேளுங்கள்!'' என்றது.

தொழிலாளர்களுக்குப் பரம ஆனந்தம். உச்சகட்ட பரவசத்தில், ''நான் உடனே சுவிட்சர்லாந்துல இருக்கணும்!'' என்று முந்திக்கொண்டு கேட்டார் ஒருவர். தேவதை அருள்பாலிக்கவும், அடுத்த விநாடி.. அவர் சுவிட்சர்லாந்தில்!

துடித்துக்கொண்டிருந்த இன்னொருவர், ''லாஸ்வேகாஸ் சூதாட்ட அரங்கில் நான் உல்லாசமாக இருக்க வேண்டும்'' என்று கேட்க, அவருக்கும் வரம் தரப்பட்டது.

பொறுமையாக நின்றிருந்த முதலாளியைத் தேவதை பார்க்க, ''அந்த ரெண்டு பேரும் உடனே இங்கே இருக்கணும்'' என்றார்.


ஆகையால் நண்பர்களே இது போன்றதொரு தருணத்தில் " எப்பவுமே முதலாளியைத்தான் முதல்ல பேசவிடணும். " என்றார்.

No comments: