Thursday, November 12, 2009

நீதி: எப்பவுமே முதலாளியைத்தான் முதல்ல பேசவிடணும்.


ஒரு ஊரில் 2 நண்பர்கள் இருந்தார்கள் அவர்கள் வேலைக்கு செல்லும் பாதையில் ஒரு தகவல் பலகை இருக்கும் அதில் தினந்தோரும் நல்ல கருத்துக்கள், சிலேடைகள் எழுதப்பட்டிருப்பது வழுக்கம். அன்றும் "எப்பவுமே முதலாளியைத்தான் முதல்ல பேசவிடணும்." என்றிருந்தது, அதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட விவாதம் தற்போது முல்லா-வின் வேட்டிற்கு முன்னால் நிற்க வைத்திருந்தது.

அவர்களிருவரும் தாங்களுக்கு அந்த கருத்தின் ஆழத்தை விபரமகவும் சுலபமாகவும் புரியவைக்க வேண்டுமென முல்லா-வை கேட்டுக்கொண்டனர்.

முல்லா அவர்களிடம்,

ஒரு முதலாளி தனது கம்பெனியின் இரண்டு தொழிலாளர்களோடு பிக்னிக் போனார்.

போன இடத்தில் எதிர்பாராதபடி அவர்களது எதிரில் ஒரு தேவதை தோன்றி, ''ஆளுக்கொரு வரம் தருகிறேன். கேளுங்கள்!'' என்றது.

தொழிலாளர்களுக்குப் பரம ஆனந்தம். உச்சகட்ட பரவசத்தில், ''நான் உடனே சுவிட்சர்லாந்துல இருக்கணும்!'' என்று முந்திக்கொண்டு கேட்டார் ஒருவர். தேவதை அருள்பாலிக்கவும், அடுத்த விநாடி.. அவர் சுவிட்சர்லாந்தில்!

துடித்துக்கொண்டிருந்த இன்னொருவர், ''லாஸ்வேகாஸ் சூதாட்ட அரங்கில் நான் உல்லாசமாக இருக்க வேண்டும்'' என்று கேட்க, அவருக்கும் வரம் தரப்பட்டது.

பொறுமையாக நின்றிருந்த முதலாளியைத் தேவதை பார்க்க, ''அந்த ரெண்டு பேரும் உடனே இங்கே இருக்கணும்'' என்றார்.


ஆகையால் நண்பர்களே இது போன்றதொரு தருணத்தில் " எப்பவுமே முதலாளியைத்தான் முதல்ல பேசவிடணும். " என்றார்.

Monday, November 2, 2009

தத்துவஞானியிடம் முல்லாவின் வேடிக்கை

முல்லாவின் ஊருக்கு ஒரு தத்துவ ஞானி வந்தார்.

ஒவ்வொரு நாளும் மாலையில் பொதுமக்கள் அடங்கிய ஒரு கூட்டத்தில் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றினார். ஒருநாள் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது கீழக்கண்டவாறு ஒரு தத்துவத்தைக் கூறினார்.

இறைவன் சிருஷ்டியில் எல்லா உயிர்களுமே சமம்தான்.

நாம் மற்ற மனிதர்களை மட்டுமின்றி மிருகங்கள் போன்ற உயிரினங்களையும் நமக்குச் சமமாக பாவித்து அன்புடன் நடத்த வேண்டும்.

அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தத்துவ ஞானியிடம் ஒரு வேடிக்கை செய்ய நினைத்தார். உடனே அவர் எழுந்து தத்துவ ஞானி அவர்களே, நீங்கள் கூறும் கருத்து அவ்வளவு சரியல்ல என்று எனக்குத் தோன்றுகிறது என்றார்.

இதை எந்தக் கண்ணோட்டத்தில் கூறுகிறீர், நீர் உமது வாழ்க்கையில் ஏதாவது சோதனை செய்து பார்த்தீரா? என்று தத்துவஞானி கேட்டார்.

சோதனை செய்து பார்த்த அனுபவம் காரணமாகத்தான் இந்தக் கருத்தை கூறுகிறேன் என்றார் முல்லா.

என்ன சோதனை செய்தீர்? அதை விளக்கமாகக் கூறும் தத்துவ ஞானி கேட்டார். நான் என்னுடைய மனைவியையும் என் வீட்டுக் கழுதையும் சரி சமமாக என்றார் முல்லா.

அதன் விளைவு என்ன? என்று தத்துவ ஞானி கேட்டார்.

எனது பரிசோதனையின் விளைவாக ஒரு நல்ல கழுதையும், கெட்ட மனைவியும் கிடைத்தாள் என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் தத்துவ ஞானி உட்பட அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர்.